தனித்திறமைகள் 2019 – தமிழ்ப் பேச்சுப் போட்டி விதிமுறைகள்

2019 Talent Show Registration

To register for the event and pay, please click here.

தமிழ்ப் பேச்சு போட்டிகள் நவம்பர் மாதம் 23ம் தேதி, சனிக்கிழமை, விடுமுறை கொண்டாட்ட மேடையில் நடைபெறும்.

மூன்று பிரிவுகளில் தமிழ்ப் பேச்சுப் போட்டி நடைபெறும்

பிரிவுகள்

சிறுவர்கள் பிரிவு

 • தொடக்கப் பள்ளி மாணவர்கள் – ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை
 • நடுநிலைப் பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் – ஆறு முதல் பன்னிரெண்டாம்  வகுப்பு வரை

பெரியவர்கள் பிரிவு

 • 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு

கால அளவு

 • தொடக்கப் பள்ளி மாணவர்கள் – ஒரு நிமிடத்திற்கு குறையாமலும், இரண்டு நிமிடங்களுக்கு மிகாமலும் பேச வேண்டும்
 • பிற பிரிவுகள் – மூன்று நிமிடங்களுக்குக் குறையாமலும், ஐந்து நிமிடங்களுக்கு மிகாமலும் பேச வேண்டும்.

பரிந்துரைக்கப்படும் தலைப்புகள்

 • சுற்றுச் சூழல் தொடர்பான தலைப்புகள்
 • சுய முன்னேற்றம் மற்றும் தன்னிம்பிக்கை குறித்த தலைப்புகள்
 • தமிழ் வரலாறு, தமிழ் இலக்கியம், தமிழ் மொழி சார்ந்த தலைப்புகள்
 • தாய் மொழி கற்றலின்  அவசியம்
 • உடல் / மனம் நலம் சார்ந்த தலைப்புகள்
 • இவை தவிர பங்கேற்பாளர் தனக்குரியதாகக் கருதும்  எந்தப் பொதுக்  கருத்துக்கள் குறித்தும் பேசலாம்.
 • எனக்குப் பிடித்த தலைவர் அல்லது தலைவி (அரசியல் கட்சிகள் சார்ந்த தலைவர்கள் குறித்த தலைப்புகள் அனுமதிக்கப்படாது)

விதிமுறைகள்

 • தேர்ந்தெடுத்த தலைப்பினை நியூசெர்சி தமிழ்ப் பேரவை மின்னஞ்சலுக்கு – events@njtamilperavai.org அனுப்ப வேண்டும்.
 • தலைப்பிற்கு விழாக் குழுவின் அனுமதியைப் பெற வேண்டும்.  அனுமதி பெறாத தலைப்புகள் மேடையில் பேச அனுமதிக்கப்படாது.
 • தலைப்பினைக் குறித்த கருத்துக்களும், முடிவுகளும் முழுக்க முழுக்க நடுவர் ஆய்வுக்குற்பட்டது.
 • தங்கள் கருத்தினை சார்ந்து மட்டுமே பேச வேண்டும்.
 • இது பட்டிமன்றமோ, விவாதமோ  அல்ல ஆதலால் முன் பேசியோர் கருத்தினை ஒட்டியோ வெட்டியோ பேசக் கூடாது.
 • சொந்தக் கருத்தாக மட்டுமே இருக்க வேண்டும். பிறருடைய பேச்சினை பயன்படுத்தக் கூடாது
 • இது மாறுவேடப் போட்டி அல்ல. பங்கேற்பர் தங்களுக்கு வசதியான, இயல்பான உடைகளில் வரலாம்.
 • பங்கேற்பாளர்களின் பேச்சினைத் தேர்ந்தெடுக்க பெரும்பாலும் கீழ்க்கண்ட வகைகளில் மதிப்பீடும், ஒப்பீடும் நடக்கும்.
  தனித்தமிழ், கருத்துச் செறிவு, மேடை  ஆளுமை, தங்கு தடையற்ற பேச்சு, உடல் மொழி, நேரம் கடைப்பிடித்தல்.