நோக்கம்

நியூசெர்சியில் வாழும் தமிழர்கள், தங்கள் தாய் மொழியான தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியங்களை நியூசெர்சியில் கற்கவும், பேணி வளர்க்கவும்; நியூசெர்சியில் வாழும் தமிழர்களின் நலன்களுக்கு உதவவும்; புதியதாய் நியூசெர்சிக்குப் புலம்பெயரும் தமிழர்களுக்கு வழிகாட்டவும்; நமக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து, தமிழால் தமிழர்களாய் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் வாழக் களம் அமைத்துக் கொடுப்பதை; நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க மண்ணின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாக நியூசெர்சி தமிழ்ப் பேரவை செயல்படும்.

Featured Event

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்

போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு வீரவணக்கம்…
இனப்படுகொலையை என்றும் மறவோம்…
 
2009ல், ஈழத்தில், முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான மக்கள் மீது நடந்த மிகப் பெரிய தாக்குதலில், ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். போருக்குப் பின்பு தமிழ் மக்கள் பெரும் அளவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பலர் காணாமல் போயினர். தமிழ் இனம், ஈழத்தில் மிகப் பெரிய இன அழிப்பினை எதிர்கொண்டது.
 
1956ல் இலங்கையில் கொண்டு வரப்பட்ட சிங்கள ஆட்சி மொழி சட்டத்தை எதிர்த்து அற வழியில் தொடங்கிய தமிழ் மக்களின் போராட்டம், 2009ல் மிக மோசமான இன அழிப்புத் தாக்குதலில் அழிக்கப்பட்டது. பல உலகநாடுகளிலும் தமிழ் மக்கள் பல போராட்டங்களை நடத்தினாலும், ஆளும் அரசுகள் தமிழினத்திற்கு எவ்வித ஆதரவும் அளிக்காமல் நாதியற்ற ஒர் இனமாக முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் அழிக்கப்பட்டனர்.
 
தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்றிணைய வேண்டிய தேவையைத் தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நமக்கு நினைவுறுத்துகிறது. தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் தான் நியூசெர்சி தமிழ்ப் பேரவை செயல்பட்டு வருகிறது. நமக்குள் இருக்கும் பேதங்களை மறந்து தமிழர்களாக நாம் ஒன்றிணைய வேண்டும்.

தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம்

Events

2022 Annual Sponsors

தமிழால், தமிழர்களாய் ஒன்றிணைவோம்

நியூசெர்சி தமிழர்கள் அனைவரையும் நியூசெர்சி தமிழ்ப் பேரவையில் உறுப்பினராக இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.