எங்களைப் பற்றி
நியூசெர்சி மாநிலம், அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று. வடக்கே செர்சி நகரம் தொடங்கி தெற்கே செரிகில் நகரம் வரை பரந்துள்ள இம் மாநிலத்தில், பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து நியூசெர்சி தமிழர்களுக்கு பொதுவான ஒர் அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாக நியூசெர்சி தமிழ்ப் பேரவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நியூசெர்சியில் வாழும் தமிழர்கள், தங்கள் தாய் மொழியான தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியங்களை நியூசெர்சியில் கற்கவும், பேணி வளர்க்கவும்; நியூசெர்சியில் வாழும் தமிழர்களின் நலன்களுக்கு உதவவும்; புதியதாய் நியூசெர்சிக்குப் புலம்பெயரும் தமிழர்களுக்கு வழிகாட்டவும்; நமக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து, தமிழால் தமிழர்களாய் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் வாழக் களம் அமைத்துக் கொடுப்பதை; நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க மண்ணின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாக நியூசெர்சி தமிழ்ப் பேரவை செயல்படும்.
வள்ளுவத்தின் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் உன்னதமான வழியில் நியூசெர்சியில் ஒன்றிணைவோம்…
நிறுவனர்கள்
நியூசெர்சி தமிழ்ப் பேரவை 2019ம் ஆண்டு சனவரி மாதம் தொடங்கப்பட்டது. நியூசெர்சி தமிழ்ப் பேரவையை நிறுவிய நிறுவனர்கள்.
- சாந்தி தங்கராசு
- சசிகுமார் ரெங்கநாதன்
- கபிலன் வெள்ளையா
நிர்வாகக்குழு
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் நிர்வாகக்குழு
செயற் குழு
- கபிலன் வெள்ளையா – தலைவர்
- சசிகுமார் ரெங்கநாதன் – துணைத்தலைவர் (செயல்)
- சாந்தி தங்கராசு – துணைத்தலைவர் (நிதி)
- மணிகண்டன் சிவசுப்ரமணியன் – ஒருங்கிணைப்பாளர் (உறுப்பினர் சேவை)
- மோகன்தாசு சங்கரன் – ஒருங்கிணைப்பாளர் ( நிகழ்ச்சிகள் )
ஆலோசனைக்குழு
- செந்தில்நாதன் முத்துசாமி
- அமுதா ஆறுமுகம்
ஒருங்கிணைப்புக்குழு
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்புக்குழு
- பொற்செல்வி வேந்தன்
- சிறீலெட்சுமி கல்யாணசுந்தரம்
- இராமலெட்சுமி நடராசன்
- மீனாட்சி இராசசேகரன்
- சாந்தி உத்திரசாமி
- இரவி பெருமாள்சாமி
- பிரபு இரங்கராசு
- இராசா இளங்கோவன்
- கார்த்திக் காவேரிசெல்வன்
- பிரபு சின்னத்தம்பி
- கருப்பையா கணேசன்
- இரமேசு தியாகராசன்
- செந்தில் வாசன்
- ஆனந்த் சம்பத்குமார்
- செந்தில் இராமமூர்த்தி
- விசயகுமார் நடராசன்
- குமார் கவுண்டர்
- இலெட்சுமி சுந்தர்ராசன்
- செகநாதன் காமராசு
- பாலாமுதன் சோனை
- பாசுகர் ஆறுமுகசாமி
- சின்னசாமி பாப்பனன்
- சுப்பிரமணியன் அங்கப்பன்
- தனா சிவபிரகாசம்
- செய் மாரிச்சாமி
- உதயக்குமார் கிருட்டிணமூர்த்தி
- ஞானசம்பந்தம் பிள்ளை