பேரவைத் தேர்தல் 2021

பேரவையில் இணைந்து பணியாற்ற உங்களை அழைக்கிறோம்

சுமார் 1500 உறுப்பினர்களைக் கொண்ட நியூசெர்சியின் முதன்மையான தமிழ் அமைப்பான நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் 2022 ஆம் ஆண்டுக்கான பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க “பேரவைத் தேர்தல்” நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்தாண்டும் சனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும்.
 
நியூசெர்சி தமிழ்ப் பேரவையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கும் ஆண்டு உறுப்பினர்கள் நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் பொதுக்குழுவில் இணையலாம். பொதுக்குழு அமைப்பு பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுக்கும் அமைப்பாக இருந்து வருகிறது. இந்த அமைப்பில் இணையக் கூடிய விவரங்களை உறுப்பினர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி இருக்கிறோம். உங்கள் மின்னஞ்சலில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து எங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
 
நியூசெர்சியில் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியில் நியூசெர்சி தமிழ்ப் பேரவை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழர்களை ஒன்றிணைக்கும் கொண்டாட்டங்கள், நம் குழந்தைகள் செம்மொழியான நம் தமிழ் மொழியைக் கற்க உதவுதல், தமிழர்களின் நிதி மேலாண்மையை செம்மையாக்க வருமான வரி, பங்குச்சந்தை, முதலீடு சார்ந்த கூட்டங்களை நடத்துதல், நம் குழந்தைகளின் கல்லூரிக் கனவுகளுக்கு வழிகாட்டுதல், நம் குழந்தைகளின் தனித்திறமைகளுக்குக் களம் அமைத்தல், தமிழ் இலக்கிய வாசிப்பை ஊக்குவிக்க “நூலைப் படி” போன்ற இலக்கியக் கூட்டங்கள், “அறிவரங்கம்” நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு அறிவுசார் நிகழ்ச்சிகள் என நியூசெர்சி தமிழர்களுக்காக பல முன்னெடுப்புகளை நியூசெர்சி தமிழ்ப் பேரவை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இத்தகைய பணிகளில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் நீங்களும் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம்.
 
நியூசெர்சி தமிழ்ப் பேரவையுடன் இணைந்து பணியாற்ற நியூசெர்சி தமிழர்களை அழைக்கிறோம்.
 
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம்