பொங்கல் கிராமியத் திருவிழா
தமிழர் திருநாளை தமிழ்ப் பேரவையுடன் கொண்டாட நியூசெர்சி தமிழர்களை அழைக்கிறோம்…
பொங்கல் விழாவில் நடைபெறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்றே பதிவு செய்யுங்கள்.
2020 ஆண்டின் முதல் விழாவாக பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழா ஒரு கிராமியத் திருவிழாவாக அமைய இருக்கிறது.
சோழா உணவகம் (The Chozhas) வழங்கும் வாழையிலையில் மதிய விருந்து பொங்கல் சிறப்பு விருந்தாக அமைய இருக்கிறது. சிறப்பு நிகழ்ச்சியாக தமிழிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் கலந்து கொள்கிறார்.
ஆண்டு உறுப்பினர்களுக்கு நுழைவுக் கட்டணம், பங்கேற்புக் கட்டணம் இல்லை. பிறருக்குக் குறைந்தக் கட்டணமாக $10 (பெரியவர்களுக்கு), $5 (6-12வயது குழந்தைகளுக்கு) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம்…
Participant Fee
பொங்கல் கிராமியத் திருவிழாவில் நடைபெற உள்ள கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற பதிவுக் கட்டணம் $5 மட்டுமே. ஆண்டு உறுப்பினர்களுக்குப் பதிவுக் கட்டணம் இல்லை.
குழு பதிவுக்கு கட்டணம் செலுத்த:
https://njtamilperavai.org/2020-pongal-participation-fee