சமகாலத் தமிழ் இலக்கியம் - தொடர் கூட்டம்
அமெரிக்காவில் சமகாலத் தமிழ் இலக்கியங்களை அறிமுகம் செய்யும் முயற்சியாக, நவீனத் தமிழ் இலக்கியம் குறித்த தொடர் கூட்டங்களை நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் தளம் நடத்த உள்ளது.
இந்தக் கூட்டத் தொடரின் முதல் கூட்டம் மே 29ம் தேதி, வெள்ளிக்கிழமை, இரவு 9 மணிக்கு (EST) நடைபெற உள்ளது…
செம்புலம் என அழைக்கப்படுகிற நெய்வேலி, விருத்தாச்சலம், வடலூர், பண்ருட்டி பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வியலை அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, இப் பகுதியின் தொன்மங்களை, வட்டார வழக்கின் அழகியலுடன் தன் எழுத்துக்களில் கொண்டு வருபவர் திரு.கண்மணி குணசேகரன். இவரின் “அஞ்சலை” புதினம் தமிழின் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. இவர் எழுதிய “நடுநாட்டுச் சொல்லகராதி” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
அஞ்சலை, நெடுஞ்சாலை, கோரை, வந்தாரங்குடி போன்றவை இவரின் குறிப்பிடத்தகுந்த நாவல்கள். உயிர்த்தண்ணீர், ஆதண்டார் கோயில் குதிரை போன்ற குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
செம்புலத்து மக்களின் வாழ்க்கையையும், போராட்டங்களையும் யதார்த்தத்துடன் தன் படைப்புகளில் கொண்டு வரும் செம்புலத்துப் படைப்பாளி திரு.கண்மணி குணசேகரன் அவர்களை நியூசெர்சி தமிழ்ப் பேரவை கொண்டாடுகிறது.
பல்வழி அழைப்பு (Conference Call) வாயிலாக மே 29ம் தேதி, வெள்ளிக்கிழமை, இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
Conference Call
425-436-6355
Access code : 206029