சமகாலத் தமிழ் இலக்கியம் - தொடர் கூட்டம்
அமெரிக்காவில் சமகாலத் தமிழ் இலக்கியங்களை அறிமுகம் செய்யும் முயற்சியாக, நவீனத் தமிழ் இலக்கியம் குறித்த தொடர் கூட்டங்களை நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் தளம் நடத்தி வருகிறது.
இந்தக் கூட்டத் தொடர் கூட்டம் வரும் சூன் 5ம் தேதி, வெள்ளிக்கிழமை, இரவு 9:30 மணிக்கு (EST) நடைபெற உள்ளது…
இந்த வாரம் நம்முடன் உரையாட வரும் எழுத்தாளர் மிகவும் சிறப்பானவர். விவசாயி. நான் முதன்மையாக விவசாயி அப்புறம் தான் எழுத்தாளர் என்று சொல்பவர் தான் திரு. சு.வேணுகோபால்.
சமகாலத் தமிழ் இல்லகிய ஆளுமைகளில் முக்கியமானவர். விவசாய வாழ்வின் வீழ்ச்சியையும், தனி மனித உளவியலையும் முன்வைக்கும் இவரது படைப்புகள் தமிழன் முக்கியமான படைப்புகளாகக் கொண்டாடப்படுகின்றன.
திரு. சு.வேணுகோபால் அவர்களை நியூசெர்சி தமிழ்ப் பேரவை கொண்டாடுகிறது.
பல்வழி அழைப்பு (Conference Call) வாயிலாக சூன் 5ம் தேதி, வெள்ளிக்கிழமை, இரவு 9:30 EST மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
Conference Call
425-436-6355
Access code : 206029