சமகாலத் தமிழ் இலக்கியம் - தொடர் கூட்டம்
அமெரிக்காவில் சமகாலத் தமிழ் இலக்கியங்களை அறிமுகம் செய்யும் முயற்சியாக, நவீனத் தமிழ் இலக்கியம் குறித்த தொடர் கூட்டங்களை நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் தளம் நடத்தி வருகிறது.
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் “சமகாலத் தமிழ் இலக்கியம்” தொடர் கூட்டத்தில், இந்த வாரம் எழுத்தாளர், கவிஞர் திரு.தீபச்செல்வன், கிளிநொச்சியில் இருந்து நம்முடன் இணைகிறார்…
சமகாலத் தமிழ் இலக்கியத்தில் மிகவும் காத்திரமான படைப்புகளாக ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகள் உள்ளன. சுமார் முப்பது ஆண்டு கால ஈழ விடுதலைப் போராட்டம், போர், தமிழர்களின் வாழ்வியல் போராட்டம், பெண்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் என ஈழ வாழ்வியல் சார்ந்த பல காத்திரமான கவிதைகளையும், புதினங்களையும் ஈழத்து எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.
சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் திரு.தீபச்செல்வன். சிறு வயதிலேயே இலக்கிய உலகிற்கு “பதுங்கு குழியில் பிறந்த குழந்தை" என்ற கவிதைத் தொகுப்பு மூலம் அறிமுகமான தீபச்செல்வன், ஈழப் போராட்டத்தின் வலியை, தமிழர்களின் போராட்ட வரலாற்றை, தமிழர்களின் வாழ்வியலை தன் கவிதைகளில் காத்திரமாக வெளிப்படுத்தி வருகிறார்.
பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம், பாழ் நகரத்தின் பொழுது, ஈழம் மக்களின் கனவு, ஈழம் போர்நிலம், கிளிநொச்சி போர்தின்ற நகரம், எதற்கு ஈழம்?, எனது குழந்தை பயங்கரவாதி, எனது நிலத்தை விட்டு எங்குச் செல்வது? போன்ற பல புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
தீபச்செல்வன் எழுதிய “நடுகல்" புதினம், சமகாலத் தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்புகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. நடுகல் புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட உள்ளது.
ஈழப் போராட்டம் சார்ந்த தமிழர்களின் வலிகளையும், உரிமைகளையும் கவிதைகள் வடிவில் கொண்டு வந்த சமகாலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியான திரு.தீபச்செல்வனுடன் இந்த வாரம் நாம் உரையாடுகிறோம்.
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் “சமகாலத் தமிழ் இலக்கியம்" கூட்டத் தொடரில் தொடர்ந்து இணையுங்கள்…
பல்வழி அழைப்பு (Conference Call) வாயிலாக சூன் 12ம் தேதி, வெள்ளிக்கிழமை, இரவு 9:30 EST மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
Conference Call
425-436-6355
Access code : 206029
