நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே : காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி
வரும் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி, மாலை 7:30 மணிக்கு (EST), நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சங்க இலக்கியத்தில் காதல் குறித்த ஒரு கலந்துரையாடல், பேரவைப் பாடகர்கள் பங்கேற்கும் இன்னிசை இரவு, அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் பல்சுவை நிகழ்ச்சிகள் என நெஞ்சம் நிறைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும்.
நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே;
இமை தீய்ப்புஅன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.(குறுந்தொகை.4)