கோடை விழா 2020
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் “கோடை விழா 2020”, இணையம் மூலமாக இந்தாண்டு நடைபெற உள்ளது.
சென்ற ஆண்டு திறந்த வெளிப் பூங்காவில் கலைநிகழ்ச்சிகள், கைப்பந்து போட்டி மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் சிறப்பாக கோடை விழா நடைபெற்றது. இந்தாண்டு பூங்காவில் நிகழ்ச்சிகள் நடைபெற “தடை” உள்ளதால் இணையம் மூலமாக “கிராமியக் கலை விழாவாக” மதுரையில் இருந்து நேரலையில் நடைபெற உள்ளது.
மதுரை முத்தமிழ் நாட்டுபுறக் கலைக் குழுவின் கரகாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள், காளியாட்டம் போன்றவை நடைபெற உள்ளன.
இவை தவிர பெருந்தலைவர் காமராசர் 118வது பிறந்த தினத்தினை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
அனைவரையும் இணையம் மூலமாக நடைபெறும் “கோடை விழா" நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைக்கிறோம்…
நாள் : சூலை 18ம் தேதி, சனிக்கிழமை
நேரம் : இரவு 8:30 மணி (EST)
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம்…