சமகாலத் தமிழ் இலக்கியம் : தொடர் உரையாடல்
நியூசெர்சி தமிழ்ப் பேரவை, சமகாலத் தமிழ் இலக்கியம் சார்ந்த தொடர் உரையாடல் கூட்டங்களை நடத்தி வருகிறது. எழுத்தாளர்கள் திரு.சு.வேணுகோபால், திரு.அழகியபெரியவன், திரு.கண்மணி குணசேகரன், திரு.தீபச்செல்வன், திரு.சயந்தன் போன்ற பல எழுத்தாளர்கள் இக் கூட்டங்களில் பங்கேற்று வட அமெரிக்க வாசகர்களுடன் உரையாடி உள்ளனர். அந்த வரிசையில் எழுத்தாளர், கதைசொல்லி, நடிகர் என பன்முக ஆளுமை கொண்ட எழுத்தாளர் திரு.பவா செல்லத்துரை அவர்கள் நம்முடன் வரும் நவம்பர் மாத கூட்டத்தில் இணைகிறார்.
இந்த தொடர் உரையாடல் கூட்டங்களில் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.
தமிழால், தமிழராய் ஒன்றிணைவோம்
அமெரிக்க நேரம்: வெள்ளிக்கிழமை, நவம்பர் 11 ஆம் நாள், இரவு 9 மணி ( EST கிழக்கு நேரம்)
இந்திய நேரம்: சனிக்கிழமை, நவம்பர் 12 ஆம் நாள், காலை 7:30 மணி
சூம் நேரலை: njtamilperavai.org/zoom
வலையொளி/முகநூல் நேரலை: njtamilperavai.org/live