
போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு வீரவணக்கம்…
இனப்படுகொலையை என்றும் மறவோம்…
2009ல், ஈழத்தில், முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான மக்கள் மீது நடந்த மிகப் பெரிய தாக்குதலில், ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். போருக்குப் பின்பு தமிழ் மக்கள் பெரும் அளவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பலர் காணாமல் போயினர். தமிழ் இனம், ஈழத்தில் மிகப் பெரிய இன அழிப்பினை எதிர்கொண்டது.
1956ல் இலங்கையில் கொண்டு வரப்பட்ட சிங்கள ஆட்சி மொழி சட்டத்தை எதிர்த்து அற வழியில் தொடங்கிய தமிழ் மக்களின் போராட்டம், 2009ல் மிக மோசமான இன அழிப்புத் தாக்குதலில் அழிக்கப்பட்டது. பல உலகநாடுகளிலும் தமிழ் மக்கள் பல போராட்டங்களை நடத்தினாலும், ஆளும் அரசுகள் தமிழினத்திற்கு எவ்வித ஆதரவும் அளிக்காமல் நாதியற்ற ஒர் இனமாக முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் அழிக்கப்பட்டனர்.
தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்றிணைய வேண்டிய தேவையைத் தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நமக்கு நினைவுறுத்துகிறது. தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் தான் நியூசெர்சி தமிழ்ப் பேரவை செயல்பட்டு வருகிறது. நமக்குள் இருக்கும் பேதங்களை மறந்து தமிழர்களாக நாம் ஒன்றிணைய வேண்டும்.
தமிழால், தமிழராய் ஒன்றிணைவோம்