பெண்ணுரிமை, பாலினச் சமத்துவம்
பெண்ணுரிமை (Women’s Rights), பாலினச் சமத்துவம் (Gender Equality) போன்றவற்றை வலியுறுத்துவதும், அது குறித்த பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இன்றைக்கு உள்ள அவசிய தேவையாகும். முன் எப்பொழுதையும் விட இன்றைக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து நாம் அணிதிரள வேண்டியுள்ளது. பெண் விடுதலைப் பெறாத ஒரு சமூகம் நாகரிகச் சமூகமாக வளர்ச்சி அடைய முடியாது.
பொள்ளாச்சியில் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்கவும், பாலியல் குற்றவாளிகளுக்கு உடனடியாகக் கடும் தண்டனை வழங்க வலியுறுத்தவும் அனைவரும் ஒன்று திரள்வோம். வாருங்கள்…
பெண்ணுரிமைக்காகவும், பாலினச் சமத்துவத்திற்காகவும் ஓங்கி நம் குரலை ஒலிப்போம்….