நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் பொங்கல் கிராமியக் கலை விழா
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் இரண்டாம் ஆண்டு சிறப்பான ஓர் ஆண்டாக அமைந்தது.
2021-ஆம் ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக, “பொங்கல் கிராமியக் கலை விழா" சனவரி 30ம் தேதி, சனிக்கிழமை இரவு 8:30மணிக்கு (EST) இணையம் மூலமாக நடைபெற உள்ளது.
விழாவின் சிறப்பு அம்சங்களான MR கலைக் குழு வழங்கும் துடும்பாட்டம், நீலாம்பூர் ரேக்ளா பந்தயம் நிகழ்ச்சிகள் கோவையிலிருந்து நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்.
மேலும், “மங்கல இசை", “இயற்கை விவசாயம் – ஓர் உரையாடல்", பேரவைக் குழுவினர் வழங்கும் “பறையிசை" போன்றவையும் நடைபெற உள்ளன.
இவை தவிர, நியூசெர்சி தமிழர்களுக்காக “கிராமிய நடனங்கள்", “இலக்குரை எழுதுதல்", “உங்க வீட்டுப் பொங்கல்" நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இவற்றில் பங்கேற்க முன்பதிவு செய்ய வேண்டும்.
சிறப்பு பொங்கல் விருந்தாக, Mrs. Kumar’s, Monore உணவகம் வழங்கும் வாழையிலை சைவ மதிய விருந்து சனிக்கிழமை சனவரி 30 அன்று பல்வேறு நகரங்களில் இருந்து விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவில் பங்கேற்க நியூசெர்சி தமிழர்களை அழைக்கிறோம்…
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம்.
வாழையிலை மதிய விருந்து.
கலை விழாவில் பங்கேற்பதற்கான பதிவிப் படிவம்
பேரவையின் பொங்கல் கிராமியக் கலை விழாவில் பங்கேற்பதற்கான பதிவுப் படிவம்.