ஈகைத் திருநாள் ரமலான் & அன்னையர் தின விழா சிறப்பு நிகழ்ச்சி
நிகரில்லா அன்னையருக்கு ஒரு சிறு காணிக்கை (tribute) அளிக்கும் விதத்தில், நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் அன்னையர் தின விழா, ரமலான் திருநாளின் சிறப்பு நிகழ்ச்சியாக, சனிக்கிழமை மே 15-ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு (கிழக்கு) அன்று நடைபெற உள்ளது.
பேராசிரியர், முனைவர் திருமதி.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், zoom செயலி மூலம் இணைந்து, நம்முடன் கலந்துரையாட இருக்கிறார்.
அன்னையர் தின விழாவில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.
பேரவையின் அன்னையர் தின நிகழ்ச்சிகளில், உங்கள் அன்னைக்கு அன்பை/நன்றியைத் தெரிவிக்க நீங்கள் விரும்புகிறீர்களா?
உங்கள் அன்னையின் பெயர்/நகரம், உங்கள் பெயர்/நகரம் மற்றும் ஒரு வரியில் உங்கள் கருத்தை, வாசகம், நிழற்படம், ஓவியம், காணொளி (15 வினாடிகளுக்கு மிகாமல்) வடிவமாக, தமிழ்ப் பேரவையின் njtamilperavai.events@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
இறுதித் தேதி: வியாழக்கிழமை, மே 13 இரவு 9:00 மணி