தமிழி பயிற்சிப் பட்டறை
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் வழங்கும் “தமிழி எழுத்து முறை – பயிற்சிப் பட்டறை” வரும் சனிக்கிழமை, சூன் 27ம் தேதி, “சூம் செயலி” (Zoom) மூலமாக நடைபெற உள்ளது. சூம் மூலமாக அனைவரும் பங்கேற்கலாம்.
இணையம் மூலமாக நேரலையில்…
Zoom Live – njtamilperavai.org/zoom
தமிழி என்பது தமிழ் மொழியின் தொன்மையான எழுத்து முறை ஆகும். கீழடி, கொடுமணல், பொருந்தல், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் தமிழி பொறிக்கப்பட்ட ஏராளமான பொருட்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இவை நம் தமிழ் மொழியின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன.
நம்முடைய தொன்மையான எழுத்து முறையான தமிழி எழுத்து முறைக் குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய “தமிழி எழுத்து முறை – பயிற்சிப் பட்டறையை” நியூசெர்சி தமிழ்ப் பேரவை வழங்குகிறது. “தமிழி” எழுத்துக்களை வாசிக்கும் பயிற்சியை இந்தப் பட்டறை வழங்கும்.
பட்டறையை வழங்குபவர்
முனைவர் ந.அருள்மொழி
உதவிப் பேராசிரியர்
அய்யநாடார் சானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி
இந்தப் பட்டறையில் பங்கேற்று பயன்பெற தமிழ் மொழி ஆர்வலர்களையும், வரலாற்று ஆர்வலர்களையும் அழைக்கிறோம்…
நாள் மற்றும் நேரம்
சனிக்கிழமை, சூன் 27ம் தேதி
அமெரிக்க நேரம் : காலை 11 மணி (EST)
இந்திய நேரம் : இரவு 8:30 மணி (IST)