நூலைப்படி
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் இலக்கியக் குழு வழங்கும் இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சி
கி.ரா என்று அன்புடன் அழைக்கப்படும் கி.ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை. 99 வயது வரை வாழ்ந்த கி.ராவின் பெருவாழ்வு கொண்டாடப்பட வேண்டியது. தமிழ் உள்ளவரை அவரது படைப்புகள் நின்று அவர் புகழ் பேசும்.
கி.ராவின் முதல் நாவலான ”கோபல்ல கிராமம்”, தமிழின் முக்கியமான புதினங்களில் ஒன்று. நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் இலக்கியக் குழு, கி.ரா.விற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரின் இலக்கிய ஆளுமைக் குறித்தும், “கோபல்ல கிராமம்" புதினம் குறித்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, வரும் புதன்கிழமை, மே 26ம் தேதி, இரவு 8:30 மணி (EDT) நடைபெற உள்ளது.
இந்த நாவல் குறித்துக் கலந்துரையாட விருப்பமுள்ளவர்கள், இங்கு பதிவு செய்யவும்.