
ஆசீவகம் தொடங்கி சித்தர் மரபு வரை, தனக்கென ஒரு நீண்ட தனித்த மெய்யியல் பாதை கொண்ட இனம் நம் தமிழ் இனம்.
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
என்ற தமிழ் சித்தர் பகுத்தறிவு மெய்யியல் மரபினை பத்தொன்பதாம் நூற்றாண்டில் மீட்டுருவாக்கம் செய்தவர் திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்பட்ட வள்ளலார்.
“கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக" என்று பகுத்தறிவு பேசியவர்.
“சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி"
“சாதி சமயச் சழக்கைவிட்டேன் அருட்சோதியைக் கண்டேனடி"
என்று சாதி, மதம் கடந்த சமத்துவ தமிழ் சமூகத்தை விரும்பியவர்.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என அனைத்து உயிர்களுக்குமான அன்பு வழியை போதித்தவர்.
வள்ளலார் இருநூற்றாண்டு கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில், “தமிழர் மெய்யியலும், வள்ளலாரும்" என்ற தலைப்பில் தமிழர்களின் தனித்த மெய்யியல் பாதை குறித்தும், வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் குறித்தும் நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் “வள்ளலார் 200" சிறப்பு அறிவரங்கம் கூட்டத்தில் உரையாட தமிழ்நாட்டில் இருந்து நேரலையில் திரு.கரு.ஆறுமுகத்தமிழன் இணைகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.
நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 29
நேரம் : இரவு 8:30 மணி
நேரலை : njtamilperavai.org/live
தமிழால், தமிழராய் ஒன்றிணைவோம்