GivingTuesday is a global generosity movement unleashing the power of people and organizations to transform their communities.
It was created in 2012 as a simple idea: a day that encourages people to do good. Over the past several years, this idea has grown into a global movement that inspires hundreds of millions of people to give, collaborate, and celebrate generosity.
One of the best ways to get involved is in your own community. We kindly request you to show your generosity to support NJ Tamil Peravai.
நியூசெர்சி மாநிலம், அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று. வடக்கே செர்சி நகரம் தொடங்கி தெற்கே செரிகில் நகரம் வரை பரந்துள்ள இம் மாநிலத்தில், பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து நியூசெர்சி தமிழர்களுக்கு பொதுவான ஒர் அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாக நியூசெர்சி தமிழ்ப் பேரவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நியூசெர்சியில் வாழும் தமிழர்கள், தங்கள் தாய் மொழியான தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியங்களை நியூசெர்சியில் கற்கவும், பேணி வளர்க்கவும்; நியூசெர்சியில் வாழும் தமிழர்களின் நலன்களுக்கு உதவவும்; புதியதாய் நியூசெர்சிக்குப் புலம்பெயரும் தமிழர்களுக்கு வழிகாட்டவும்; நமக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து, தமிழால் தமிழர்களாய் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் வாழக் களம் அமைத்துக் கொடுப்பதை; நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க மண்ணின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாக நியூசெர்சி தமிழ்ப் பேரவை செயல்படும்.
வள்ளுவத்தின் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் உன்னதமான வழியில் நியூசெர்சியில் ஒன்றிணைவோம்…