தமிழ் வரலாற்றுக் கண்காட்சி

அமெரிக்காவில் வளரும் நம் குழந்தைகளுக்கு நம்முடைய வரலாற்றை அறிமுகம் செய்யும் முயற்சியாக நியூசெர்சி தமிழ்ப் பள்ளிகள் மற்றும் நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கூட்டு முயற்சியாக “தமிழ் வரலாற்றுக் கண்காட்சி" நடத்தப்படுகிறது. கண்காட்சியில் கலந்து கொள்கிற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும். மூவாயிரம் ஆண்டுக் கால நம்முடைய வரலாற்றினையும், தொன்மையையும் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்போம், வாருங்கள்…

கண்காட்சிக்கான தலைப்புகள்

  • புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் இருந்து வரலாறு
  • மூவேந்தர் சார்ந்தவை – சோழர், பாண்டியர், சேரர் சார்ந்த வரலாறு
  • சமீபத்தைய அகழ்வாய்வு சார்ந்த வரலாறு – கீழடி, பொருநை (சிவகளை, ஆதிச்சநல்லூர் போன்றவை)
  • தமிழி எழுத்து வரலாறு
  • வரலாறு சார்ந்த எந்தத் தலைப்பாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் மதம் சார்ந்த தலைப்புகளுக்கு அனுமதி இல்லை.

வரலாற்றுக் கண்காட்சி விதிமுறை

  • மாணவர்கள் இதனை ஒரு திட்டப்பணியாக (Project Work) செய்யலாம்
  • மாணவர்கள் வரலாற்றுக் கண்காட்சியில் திட்டப்பணிகளை பொதுமக்கள் பார்க்கும் வகையில் செய்ய வேண்டும் (Students can use Tri-Fold Project Display Board)
  • மாணவர்கள் திட்டப்பணிகளின் புகைப்படங்கள், காணொளிகளை எங்களுக்கு அனுப்ப வேண்டிய முகவரி –  tamilhistory@njtamilperavai.org
  • பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும்.
  • சிறந்த திட்டப்பணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
  • பங்குபெற விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பிலுள்ள படிவத்தைப் பூர்த்திசெய்து சனவரி 16 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.