#NJTogether

எழுக நியூசெர்சி

கொரோனா தீநுண்மியின் தொற்றினால் வீட்டிலேயே இருந்தாலும், நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து கொரோனாவை வென்றிடுவோம் என்ற‌ நம்பிக்கையுடன் நம் அனுபவங்களையும் நம்பிக்கைகளையும் பகிரும் தளமாக நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் “எழுக நியூசெர்சி" களம் அமைய இருக்கிறது.

உங்கள் கருத்துக்களையும், எண்ணங்களையும், ஓவியமாகவோ, கட்டுரை வடிவிலோ, கவிதை வடிவிலோ, பேச்சு வடிவிலோ எங்களுக்கு அனுப்பலாம்.

இவை தவிர எதிர்மறையான செய்திகளில் இருந்து நம்மை விடுவிக்க அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் பேரவைப் பாடகர் போட்டி குழந்தைகளுக்கான ஒப்பித்தல் நிகழ்ச்சிகள் என அனைத்தும் நடைபெற உள்ளது.

இவை அனைத்தும் இணையம் மூலமாகவே நடைபெறும்.

தற்போதைய அவநம்பிக்கையான சூழலை கடந்து நம்பிக்கை அளிக்கும் சூழலை தமிழ்ச்சமூகத்தில் ஏற்படுத்துவோம்…

வாருங்கள், ஒன்றிணைவோம், கொரோனாவை வென்றிடுவோம்…

Contest Forms