!!! பொங்கல் கிராமியத் திருவிழா !!!
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் பொங்கல் கிராமியத் திருவிழா !!!
பட்டிமன்ற நாயகர் பத்மஶ்ரீ திரு. சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் நட்சத்திரப் பேச்சாளர்களான திரு. ராசா மற்றும் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்களுடன் நமது நியூசெர்சி பேச்சாளர்கள் பங்கேற்கும் கல்யாணமாலை சிறப்புப் பட்டிமன்றம், நியூசெர்சி மற்றும் சென்னையில் இருந்து ஒரே நேரத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முதல்முறையாக கல்யாணமாலை வழங்கும் “வரன் பார்க்கலாம் வாங்க" நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நியூசெர்சியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
அதுமட்டுமல்ல… தமிழ் வரலாற்றுக் கண்காட்சி, ஆட்டம், பாட்டம் என பல கொண்டாட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது.
நியூசெர்சியில் ஓமிக்குரோன் திரிபு காரணமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் நிகழ்ச்சிகளை உள்ளரங்கில் நடத்த முடியாத சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இதனால், உள்ளரங்கில் நடைபெறுவதாக இருந்த பொங்கல் கிராமியத் திருவிழா இணையம் மூலமாக நடைபெறும்.
தமிழராய் இணைந்து – தமிழர் திருநாளை சிறப்பிக்க வாரீர்
நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க : njtamilperavai.org/live
நாள் : சனிக்கிழமை, சனவரி 22 ஆம் தேதி
நேரம் : மாலை 6 மணி முதல் (EST)
ஆண்டு உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம்!
தமிழால் தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம் !!!
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் பொங்கல் கிராமியத் திருவிழா விழாவில் பங்கேற்பதற்கான பதிவுப் படிவம்.